Related Posts Plugin for WordPress, Blogger...

Saturday, December 3, 2011

தகுதி பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்குப் போட்டித் தேர்வு




சென்னை, நவ. 30: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறும் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:


இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகுதித் தேர்வை நடத்தும் முகமையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்லூரி, பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியில் சேர பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் நெட், ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். அதேபோல், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அடிப்படைத் தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவுக்கு வரும் வரை, மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படை முறையே தொடரும். எனினும், வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ள இடைநிலை ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தங்களை தகுதியுள்ளவர்களாக மாற்றிக்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை. பட்டதாரி ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரை ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.னவே, இதில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வில் கலந்துகொள்ள முடியும்.


தேசிய ஆசிரியர் கல்விக் குழு வழிகாட்டுதலின் படி, கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடங்களில் 60 மதிப்பெண்களுக்கு வினாக்களும், சமூக அறிவியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் 60 மதிப்பெண்களுக்கான வினாக்கள் இருக்கும்.


தமிழகத்தைப் பொருத்தவரை தமிழ், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தனித்தனியே நிரப்பப்படுகின்றன. அவர்களுக்கு நடத்தப்படும் தகுதித் தேர்வில் தமிழ் அல்லது ஆங்கிலத் தாளில் 60 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இருக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation