Fourth annual conference of CAT to be held tomorrow
New Delhi, Nov 5(ANI): The fourth conference of the Central Administrative Tribunal (CAT) will be held at New Delhi on Sunday.
The main purpose of the conference is to deliberate on certain issues concerning the tribunal and to improve the working conditions of the institution and also to chalk out various measures to be adopted to arrest the pendency of cases.
The conference will be inaugurated by Justice Dalveer Bhandari, Judge of the Supreme Court.
V. Narayanasamy, Minister of State for Personnel, Public Grievances and Pensions would also grace the occasion.
Justice J.S. Verma, former Chief Justice of India will be delivering a key-note address.
Former Attorney General Soli J. Sorabjee will deliver the secondRajeev Gandhi Lecture on Administrative Law, in the afternoon session.
The Central Administrative Tribunal came into existence in November 1985 and is entrusted with the task of adjudicating complaints and other service matters pertaining to the Central government employees as well as employees of PSUs and organizations so notified under Section 14(2) of the Act by the Government. (ANI)
இந்தியா வருகிறது அமெரிக்க அணுசக்தி குழு
பின்னணி பாடகர் புபென் ஹசாரிகா காலமானார்
மும்பை: பிரபல பின்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்த புபென் ஹசாரிகா உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 86. அவர் உடல்நலக்குறைவால் கடந்த ஜூன் 29ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தேசிய பளு தூக்குதல் போட்டி
இடாநகர்:
தேசிய பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி, முதன் முறையாக அருணாச்சல பிரதேசத்தில் நடக்கவுள்ளது. வரும் 21ம் தேதி துவங்கும் இப்போட்டி குறித்து இந்திய பளு தூக்குதல் கூட்டமைப்பின் இணைச் செயலர் மற்றும் அருணாச்சல பிரதேச பளு தூக்குதல் சங்கத் தலைவர் டேச்சி கூறுகையில்<, ஒசாகா, ஜப்பான் மற்றும் தைவானில் விரைவில் நடக்க உள்ள பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் தொடரில் சாதிக்க, இத்தொடர் உதவியாக இருக்கும். இதில் பங்கேற்கும் வீரர்கள் வரும் 15ம் தேதி வருவர் என்று எதிர் பார்க்கப்படுகிறது, என்றார்.
வட்டு எறிதல் போட்டி: தங்கம் வென்றார் பூனியா
புதுடில்லி:
அமெரிக்காவில் நடந்த வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கிருஷ்ண பூனியா, தங்கம் வென்று அசத்தினார்.வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் கிருஷ்ண பூனியா. அடுத்த ஆண்டு லண்டனில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இதனிடையே அமெரிக்காவின் போர்ட்லாந்து நகரில் நடந்த ஹாலோவீன் த்ரோஸ் மீட் தொடரில் பங்கேற்றார். இதன் முதல் இரண்டு வாய்ப்புகளில் பவுல் செய்தார். அடுத்து இரு முறை 60 மீ.,க்கும் மேல் வட்டு எறிந்த இவர், கடைசி வாய்ப்பில் 62.25 மீ., தூரம் எறிந்து தங்கம் வென்றார்.
இதுகுறித்து பூனியாவின் கணவர் வீரேந்தர் கூறுகையில், கடந்த 2008 பீஜிங் ஒலிம்பிக்கில், 62.72 மீ., தூரத்துக்கு எறிந்த பூனியா வெண்கலம் வென்றார். முழங்கால் காயம் குணமடைந்தவுடன், 65 மீ., எறிய முயற்சித்து வருகிறார், என்றார்.
இந்திய பார்முலா-1: இமாலய வெற்றி
நொய்டா:
இந்தியாவில் முதன்முதலாக நடந்த பார்முலா-1 கார் பந்தயம் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஊழல் மிகுந்த காமன்வெல்த் போட்டியால் கிடைத்த அவப்பெயர் நீங்கியுள்ளது.கடந்த
ஆண்டு டில்லியில் காமன்வெல்த் போட்டி நடந்தது. இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 70 ஆயிரம் கோடி ரூபாயில் பெருமளவு ஊழல் நடந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதால், உலகளவில் இந்தியாவுக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டது.
இந்நிலையில் சர்வதேச பார்முலா-1 பந்தயத்தின் 17வது சுற்று, டில்லி அருகே நொய்டாவில் புத்தா சர்வதேச சர்கியூட் மைதானத்தில் நடந்தது. பயிற்சி போட்டியின் போது டிராக்கில் நாய் குறுக்கிட்டது, பத்திரிகையாளர் சந்திப்பின் போது கரன்ட் கட் போன்றவை சிறிய அளவில் பிரச்னை ஏற்படுத்தின. ஆனாலும், நேற்று முன் தினம் நடந்த பைனலில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. உலகமே வியக்கும் வகையில் பந்தயம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.
வியக்கத்தக்க பந்தய வசதிகள், மயங்கச்செய்த விருந்தோம்பல், தீவிர ஆர்வத்துடன் மைதானத்தில் திரண்ட 1 லட்சம் ரசிகர்கள் போன்றவை இந்திய பார்முலா-1 பந்தயத்தை இமாலய வெற்றி பெற செய்துள்ளது. 350 கி.மீ., வேகத்தில் கார்கள் சீறிப்பாய்ந்த காட்சியை கண்ட ரசிகர்கள், அந்த உற்சாகத்தில் இருந்து இன்னும் மீளவில்லை.
பயந்து கொண்டிருந்தேன்:
பந்தயத்தில் பங்கேற்ற அனைத்து வீரர்களும், மீண்டும் இங்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். போட்டி குறித்து பார்முலா-1 தலைவர் எக்லஸ்டோன் கூறுகையில், கட்டுமானப்பணிகள் கடைசி நிமிடம் வரை நடந்து கொண்டு இருந்தது. இதனால் போட்டி எப்படி நடக்கும் என்று பயந்து கொண்டிருந்தேன். கடைசியில் எல்லோரும் சேர்ந்து சிறப்பானதாக மாற்றிவிட்டனர், என்றார்.
வித்தியாசமாக உள்ளது:
இந்த பந்தயத்தில் முதலிடம் பெற்று கோப்பை வென்ற ஜெர்மனியன் செபாஸ்டியன் வெட்டல் கூறுகையில், இந்தியா மிகவும் என்னைக் கவர்ந்தது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து கேள்விப்பட்டதை விட, இங்கு முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. நமது கண்களையும், காதுகளையும் நன்றாக திறந்து இந்தியாவைப் பார்த்தால், ஏகப்பட்ட விஷயங்களை கற்றுக்கொள்ளலாம், என்றார்.
----
இந்திய பார்முலா-1: வெட்டல் சாம்பியன்!
நொய்டா:
பார்முலா-1 கார் பந்தய அரங்கில் ரெட் புல் ரெனால்ட் அணி வீரர் செபாஸ்டியன் வெட்டலின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று நடந்த முதலாவது இந்திய கிராண்ட் பிரிக்ஸ் பைனலில் புயல் வேகத்தில் பறந்த இவர், சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றார். சகாரா போர்ஸ் இந்தியா அணியின் ஏட்ரியன் சுடில் 9வது இடம் பெற்று நம்பிக்கை தந்தார். தமிழக வீரரான நரேன் கார்த்திகேயன் 17வது இடமே பெற முடிந்தது.பார்முலா-1 பந்தயத்தின் 17வது சுற்றின் பைனல் நேற்று டில்லி அருகே நொய்டாவில் அமைந்துள்ள புத்தா சர்வதேச சர்கியூட் மைதானத்தில் நடந்தது. இந்தியாவில் நடக்கும் முதலாவது பார்முலா-1 பந்தயம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. மொத்தம் 60 சுற்றுகள் கொண்ட பைனலில், உலகின் 12 அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் பங்கேற்றனர்.
முதல் சுற்றில் வில்லியம்ஸ் அணியின் ரூபன்ஸ் பேரிக்கலோ, சாபர் அணியின் கோபயாஷியின் கார்கள் மோதிக் கொள்ள ஆரம்பமே திரில் அனுபவத்தை கொடுத்தது. தனது காரில் வழக்கம் போல் வேகமாக பறந்த உலக சாம்பியன் வெட்டல், வெற்றியை எடுத்த எடுப்பிலேயே உறுதி செய்தார். இவரை தொடர்ந்து ஜென்சன் பட்டன், பெர்னாண்டோ அலோன்சா, மார்க் வெப்பர் ஆகியோர் வந்தனர். கடைசி கட்டத்தில் பட்டன் கடும் போட்டியை கொடுத்தார். ஆனாலும் வெட்டலை முந்த முடியவில்லை.
மாசா ஏமாற்றம்:
பந்தயத்தின் 24வது சுற்றில் பெராரி அணியின் பிலிப் மாசா மற்றும் மெக்லாரன் மெர்சிடஸ் அணியின் லீவிஸ் ஹாமில்டனின் கார்கள் மோதிக் கொள்ள, பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து மாசாவின் காருடைய சஸ்பென்ஷன் உடைய, போட்டியின் பாதியிலேயே பரிதாபமாக விலகினார்.
முதலிடம்:
களத்தில் நடக்கும் பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் தனது பணியில் கண்ணும்கருத்துமாக இருந்த ஜெர்மனியை சேர்ந்த வெட்டல் 24, முதலிடத்தில் தொடர்ந்தார். 60 சுற்றுகளை 1 மணி நேரம் 30 நிமிடம், 35.002 வினாடிகளில் கடந்த இவர் 25 புள்ளிகளை பெற்றதோடு, இந்திய கிராண்ட்பிரிக்ஸ் பட்டத்தையும் கைப்பற்றினார். மெக்லாரன் மெர்சிடஸ் அணியின் ஜென்சன் பட்டன்(1.27:967) இரண்டாவது இடம் பெற்றார். பெராரி அணியின் பெர்னாண்டோ அலோன்சா(1.28: 298) மூன்றாவது இடத்தை பிடித்தார்.
சூமாக்கர் 5வது இடம்:
மெர்சிடஸ் அணிக்காக பங்கேற்ற ஏழு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் சூமாக்கர், ஒரு கட்டத்தில் 11வது இடத்தில் தான் வந்து கொண்டிருந்தார். பின் வேகத்தை அதிகரித்த இவர், 8வது இடத்துக்கு முந்தினார். பின் 5வது இடத்துக்கு முன்னேறி அசத்தினார்.
பெர்லின்:
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில், மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் அபாரமாக ஓடிய கென்யாவின் பட்ரிக் மக்காயு, 27 கி.மீ., பந்தைய தூரத்தை இரண்டு மணி நேரம், மூன்று நிமிடம், 38 வினாடிகளில் கடந்தார். இதன்மூலம் புதிய உலக சாதனை படைத்தார். முன்னதாக கடந்த 2008ல் நடந்த பெர்லின் மாரத்தான் ஓட்டத்தில், எத்தியோபியாவின் ஹைலி கெப்ரிசெலசி இரண்டு மணி நேரம், மூன்று நிமிடம், 59 வினாடிகளில் கடந்தார்.
தங்கம் வென்றார் உசைன் போல்ட்
ஜாக்ரெப்:
உலக தடகள சாலஞ்ச் போட்டியின், 100 மீ., ஓட்டத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் தங்கம் வென்று அசத்தினார்.குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் உலக தடகள சாலஞ்ச் போட்டிகள் நடந்தது. இதன் 100 மீ., ஓட்டத்தில் பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மின்னல் மனிதன் உசைன் போல்ட் பங்கேற்றார். சமீபத்தில் தென் கொரியாவில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், 100 மீ., ஓட்டத்தின் பைனலில் தவறான முறையில் ஓடத்துவங்கியதால், உசைன் போல்ட் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால், இந்த போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இம்முறை சிறப்பான முறையில் ஓடிய உசைன் போல்ட், 9.85 வினாடியில் கடந்து தங்கம் வென்றார். இது கடந்த ஜூன் மாதம் மொனாக்கோவில் நடந்த போட்டியில் ஓடிய நேரத்தை விட, 0.03 வினாடி குறைவாகும்.
இதுகுறித்து உசைன் போல்ட் கூறுகையில், போட்டியை துவக்குவதற்காக லைனில் நின்று கொண்டிருந்த போது, நம்பிக்கை இல்லாமல் இருந்தது. இதனால் சிறப்பான துவக்கம் கிடைக்கவில்லை. ஆனால், கடைசியில் தங்கம் வென்றது மகிழ்ச்சியாக இருந்தது, என்றார்.
செயின்ட் கீட்சை சேர்ந்த கிம் காலின்ஸ் 10.01 வினாடியில் வந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். டிரினிடாட் அண்டு டுபாகோவின் ரிச்சர்டு தாம்சன், 0.02 (10.03) வினாடிக்கு பின் வந்து வெண்கலம் கைப்பற்றினார்.
No comments:
Post a Comment
We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation