நோபல் பரிசை உருவாக்கிய சுவீடன் நாட்டைச் சேர்ந்தவரான டோமாஸ் டிரான்ஸ்ட் ரோபர் இவ்வாண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெறுபவர். இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறும் 108-வது நபர். மேலும் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அந்நாட்டைச் சேர்ந்தவருக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
1931- ஆம் ஆண்டு ஏப்ரல் 15-இல் பிறந்த டோமாஸ் டிரான்ஸ்ட் ரோமரின் தாய் பள்ளி ஆசிரியை. பெயர் ஹெல்மி. தந்தை பத்திரிகை யாளர். கோஸ்டாவில் தனது பள்ளிப் படிப்பை முடித்த இவர் "சோர்த்ரா லத்தீன் இலக்கியப் பள்ளி'யில் அரசியல், இலக்கியம், கவிதை துறையில் படித்தார். தொடர்ந்து ஸ்டார்க்ஹோம் பல்கலைக் கழகத்தில் 1956-களில் வரலாறு, மதம் மற்றும் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அப்பல்கலைக்கழகத்திலேயே உளவியல் பேராசிரியராகப் பணி தொடர்ந்த இவர் 57-களில் மோனிகா ப்ளேத் என்பவரை மணந்தார். 1960-லிருந்து 66-வரை உளவியல் பேராசிரியராக ரொக்ஸ்டுடாவிலும் சுவீடனின் பெரும் பல்கலைக்கழங்களில் பணியாற்றிக் கொண்டே கவிதைகள் புனைந்தார்.
பள்ளிப்பருவத்திலிருந்து கவிதைகள் படைத்த டிரான்ஸ்ட்ரோமரின் கவிதைகள் சுவீடன் பத்திரிகைகளில் பிரசுரமாயின.
1954-இல் அவரது 23-வது வயதில் பத்திரிகைகளில் வெளிவந்த கவிதைகள் தொகுப்பாக. "செவன்டீன் போயம்ஸ்' (17 dilcter) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
"மனித ஆத்மாவை செப்பனிடுகிற இன்ஜினியர்கள் கலைஞர்கள்' என்பார் கார்க்கி. அதனையொட்டி மானுட மனிதர்களின் ஆழ் மனதில் உள்ள ரகசியங்களை தம் கவிதைகளின் வாயிலாக பரப்பியவர் டோமாஸ் டிரான்ஸ்ட் ரோமர்.
பத்திரிகைகளில் இவரது படைப்புகள் பலரால் ஈர்க்கப்பட்டது. விமர்சனங்களும் பலதரப்பு மக்களாலும் பேசப்பட்டது. தன்னைசுற்றி ஒரு இலக்கிய வட்டத்தை உருவாக்கிய இவருக்கு அமெரிக்க கவிஞர்களான ராபர்ட், பிளே நெருக்கமான நண்பர்கள் ஆவர்.
கவிஞர் டோமாஸுக்கு இப்போது வயது 80. 1990-களில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டும், தனது இலக்கியப் பணியையும் கவிதைகள் வடிப் பதையும் மனஉறுதியோடு செய்து வருகிறார். கடந்த 2004-இல்அவர் எழுதிய "தி கிரேட் எனிக்மா' என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது.
1966-களில் வெளிவந்த அவரது கவிதைத் தொகுப்பான "விண்டோஸ் அண்ட் ஸ்டோன்' பரவலாக எல்லோராலும் பேசப்பட்டது.
இவரது 80-ஆவது வயதைக் கொண்டாடும் வகையில் டோமாஸின் ஒட்டு மொத்த கவிதை- படைப்புத் தொகுப்பினை அதாவது 1954 முதல் 2004 வரையிலான படைப்புகளை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டு சிறப்பு செய்தது சுவீடன் அரசு.
தாம் பிறந்த சுவீடனின் ஸ்டாக்ஹோமிலேயே மாணவராக பேராசிரியராக, பல்கலைக்கழக ஆலோசகராக, அரசியல் - மதம்- தத்துவ அறிஞராக வலம் வந்த இவரது படைப்புகள் ஆங்கிலம், பிரஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மன் மொழி களில் மட்டுமல்லாமல் உலகின் 60 மொழிகளில் வெளிவந்துள்ளன.
இவரது படைப்புகள் குறித்த ஆய்வு நூல்கள் 30 டஜனுக்கு மேல் தேறுமாம்.
கடந்த 10 ஆண்டுகளில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும் 8-வது ஐரோப்பியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation