Related Posts Plugin for WordPress, Blogger...

Monday, November 7, 2011

The Nobel Peace Prize 2011




              மைதிக்கான நோபல் பரிசு இவ்வாண்டு மூன்று பெண்களுக்கு கிடைத்து இருக்கிறது. இவர்கள் மூவரும் பெண்களின்உரிமைக்காக போராடியவர்கள். மூன்று பெண்களுக்கும் கூட்டாக நோபல் பரிசை அறிவித்த நோபல் கமிட்டி, ""உலகில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் தழைக்கும். இருபாலருக்கும் சம வாய்ப்புகளும், சம உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும்"" என்று கூறி இருக்கிறது.

எலன் ஜான்சன் சர்லீஃப் : இவர் லைபீரியா நாட்டின் ஜனாதிபதியாக இருக்கிறார். ஆப்பிரிக்க நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட முதல் பெண் ஜனாதிபதி இவரே. 72 வயதான இவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். 1979-ஆம் ஆண்டு முதல் 1980 வரை நிதி அமைச்சராகப் பணி புரிந்தவர். இராணுவப் புரட்சியை அடுத்து லைபீரியாவை விட்டு வெளியேறி னார். வெளிநாடுகளில் பல்வேறு நிதி நிறுவனங்களில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். 1997-ஆம் ஆண்டு லைபீரியா தேர்தலில் இரண்டாவ தாக வந்தார். 2005-ஆம் ஆண்டு லைபீரியா தேர்தலில் குடியரசுத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டு ஜனவரி 16, 2006-இல் ஆப்பிரிக்காவின் முதலாவதாக தேர்ந் தெடுக்கப்பட்ட இவர் இன்றுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் குடியரசுத்தலைவராக திகழ்கிறார். இப்போது அந்நாட்டில் நடந்துவரும் தேர்தலிலில் வெற்றிப் பெற அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறார் என்ற ஒரு குற்றச் சாட்டும் சர்லீஃப் மீது இருக்கிறது, என்றாலும் இந்தக் குற்றச்சாட்டை நோபல் கமிட்டி புறக்கணித்து, இவருக்கு நோபல் பரிசு அறிவித்துள்ளது.

லேமாக் கோவீ: இவரும் லைபீரியா நாட்டை சேர்ந்தவர். லைபீரியாவில் 2003-ஆம் ஆண்டில் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர பாடுபட்ட, அமைதிக்கான போராட்டத்தில் பங்கேற்ற ஓர் ஆப்பிரிக்க அமைதிப் போராளி. இந்த அமைதிப் போராட்டம் இறுதியில் எல்லன் ஜான்சன் சர்லீஃப் குடியரசுத் தலைவராக, ஆப்பிரிக்காவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்க வழி வகுத்தது.

பெண்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியை திறம்பட செய்தவர். கிறிஸ்தவ, முஸ்லிலிம் பெண்கள் அடங்கிய குழுவை அமைத்து போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவினார். மேலும் போர் என்ற பெயரில் பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்துப் போராடினார். இதில் வெற்றியும் பெற்றார். 2009-ஆம் ஆண்டு இவருக்கு "மிகவும் தைரியசாலிலியான பெண்' என்ற பட்டம் அந்த நாட்டு அரசால் வழங்கப்பட்டது.

தவாகுல் கர்மான்: ஏமன் நாட்டை சேர்ந்த இவருக்கு வயது 32. இவருக்கு 3 குழந்தைகள். இவர் 2005-ஆம் ஆண்டு பெண் இதழியலாளர்கள்' என்ற அமைப்பை நிறுவி அதன் தலைவராக இருந்து மனித உரிமை மீறல்களை கண்டித்து வருகிறவர். பெண் எழுத்தாளர்களை ஒன்றாகத் திரட்டி, மன்னர் அலிலி அப்துல்லா சாலேக்கு எதிராகப் போராடினார். பெண்களின் உரிமையை நிலை நாட்டினார். இவரது தந்தை மன்னரின் மந்திரிசபையில் மந்திரியாக இருந்தார். என்றாலும் அவர் தனது போராட்டத்தை கைவிடவில்லை. பெண்களின் உரிமைக்காக போராடிய இவருக்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அளிக்கப்பட உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஏமனியப் புரட்சியின் போது தவால் கர்மாகுன் அலிலி அப்துல்லா சாலேயின் அரசுக் கெதிராக மாணவர்களின் பேரணியை சன்ஆவில் ஒருங்கமைத்தார். அரசால் கைது செய்யப்பட்டு, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்ற கணவரின் புகார் களுக்கிடையே, 24 ஜனவரி அன்று பிணையம் பெற்று வெளியே வந்தார். 28 ஜனவரி அன்று மீண்டும் ஓர் போராட்டத்திற்கு தலைமை யேற்று பிப்ரவரி 3-ஆம் நாளை ""பெருங்கோப நாள்"" என அறிவித்தார். மீண்டும் மார்ச் 17  அன்று கைது செய்யப்பட்டார். ஏமன் நாட்டை சேர்ந்த தவாகுல் கர்மான், தனக்கு பரிசு கிடைத்தது பற்றி கூறுகையில், ""இந்தப் பரிசை, ஏமன் நாட்டை சேர்ந்த இளைஞர் களுக்கும், சமூக சீர்திருத்தவாதிகளுக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறேன். ஏமன் நாட்டில் ஜனநாயகம் மலர வேண்டும். நவீன ஏமன் நாட்டில் பெண்களுக்கு இன்னும் முழு உரிமைகள் பெறும் வரை ஓய மாட்டோம். முழு வெற்றிப் பெறும்வரை அமைதியான முறையில் போராடுவோம்"" என்று கூறி யிருக்கிறார். 

இதுவரை நோபல் பரிசு வரலாற்றில் ஒன்பது பெண்மணிகள் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர். உலகளவில் உண்மையான கதாநாயகிகள் இவர்கள் மட்டுமே என ஆன்டோச் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஈர்விக் ஆப்ராம்ஸ் வர்ணிக்        கிறார். பெர்தா வான் சுட்னர் (1905), ஜானே ஆடம்ஸ் (1931), எம்லி கிரீனி பால்ச் (1946), பெட்டி வில்லியம்ஸ் (1976), மெய்ரெட் கோரிகோன் (1976), அன்னை தெரேசா (1979), ஆல்வா மைராடல் (1982), ஆஸ்சாங்சுகி (1991), ரிகோபர்டா மென்சுடும் (1992), எலன் ஜான்சன் சர்லீஃப் (2011), லேமாக் கோவீ (2011), தவாகுல் கர்மான் (2011) ஆகியோர் பெண்ணுரிமைக்காகவும், மனிதநேய சேவைக்காகவும் அமைதிக்கான நோபல்பரிசு பெற்றனர்.  
                            

No comments:

Post a Comment

We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation