சென்னை, டிச. 1: 2010-11 ஆண்டில் 1,743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரைத்தவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி சனி (டிசம்பர் 3), ஞாயிறு (டிசம்பர் 4) ஆகிய இரு நாள்களில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
இதற்கான கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இணையதளத்திலும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் நகலைக் கொண்டு வந்து சான்றிதழ்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
சான்றிதழ் சரிபார்த்தலுக்கு வராதவர்களுக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் வேறொரு நாளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படமாட்டாது. பள்ளி இறுதிச் சான்றிதழ், ஆசிரியர் பட்டயச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்கள், ஜாதிச் சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு அட்டை, முன்னுரிமை இருந்தால் அதற்கான சான்றிதழ், நன்னடத்தைச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்று சரிபார்ப்பின்போது ஒப்படைக்கவில்லை என்றாலும் சம்பந்தப்பட்டவர் தகுதியற்றவராகக் கருதப்படுவார்.
வெளிமாநிலத்தில் பயின்றிருந்தால், மதிப்பீடு சான்றிதழ் ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தால் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் தகுதியற்றவராகக் கருதப்படுவார். மாற்றுத் திறனாளிகள், அரசு மருத்துவரின் சான்றிதழ் (குறைந்தபட்சம் 40 சதவீத ஊனம்) பெற்றிருக்க வேண்டும்.
கலப்புத் திருமண அடிப்படையில் முன்னுரிமை கோருபவர்கள் வட்டாட்சியரிடமிருந்தும், ஆதரவற்ற விதவை என்று முன்னுரிமை கோருபவர்கள் கோட்டாட்சியரிடமிருந்தும் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
முன்னாள் மற்றும் இப்போது சேவையில் உள்ள படைவீரர்களின் வாரிசுதாரர்கள் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநரிடமிருந்தும், மொழிப்போர் தியாகிகளின் வாரிசுகள், அரசுக்கு நிலம் கொடுத்தவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் வட்டாட்சியரிடமிருந்தும் முன்னுரிமைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

No comments:
Post a Comment
We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation