Related Posts Plugin for WordPress, Blogger...

Friday, November 4, 2011

Nov-04


700 கோடியாவது குழந்தை உ.பி.யில் பிறந்தது!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper




லக்னோ: உலகின் 700 கோடியாவது குழந்தை லக்னோவில் இன்று காலை பிறந்தது. இந்த பெண் குழந்தைக்கு நர்கிஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள் தொகை 700 கோடியை நெருங்கிய நிலையில் 700 கோடியாவது குழந்தை இந்தியாவில் உ.பி.யில் பிறக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் கணக்கிட்டு அறிவித்தது.

இந்நிலையில் இன்று காலை 7.20 மணிக்கு மால் பிளாக்கில் பிறந்த பெண் குழந்தை உலகின் 700 கோடியாவது குழந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளது. அஜய் மற்றும் வினிதா தம்பதிக்கு பிறந்த இந்த பெண் குழந்தைக்கு நர்கிஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

2011 மக்கள் தொகை கணக்குபடி இந்திய மக்கள் தொகை 121 கோடியாக உள்ளது. 2030ம் ஆண்டில் சீனாவை மிஞ்சி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.


உலகின் அதிகாரமிக்க 20 தலைவர்கள் சோனியா, மன்மோகனுக்கு இடம்


வாஷிங்டன் : உலகின் அதிகாரமிக்க தலைவர்களாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அமெரிக்காவின் பிரபல பொருளாதார இதழான போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டின் டாப் 20 பேர் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா முதலிடத்தில் இருக்கிறார். ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஹூ ஜின்டோ 2வது, 3வது இடத்தில் இருக்கிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பட்டியலில் 9வது இடத்தில் உள்ளார். ‘இந்தியாவின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த அரசியல்வாதி சோனியா. இருமுறை பிரதமர் பதவியை மறுத்தவர்Õ என அதில் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. கடந்த முறை வெளியான பட்டியலில் சோனியாவுக்கு 11வது இடம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் பிரதமர் மன்மோகன் சிங் 19வது இடத்தில் உள்ளார். ‘கேம்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற பொருளாதார நிபுணரான மன்மோகன், இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு முக்கிய பங்காற்றியவர்.

கடந்த 7 வருடங்களாக, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்கிறார்Õ என்று பிரதமர் பற்றி கூறப்பட்டுள்ளது. இதுதவிர, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி (35வது இடம்), தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் (47), விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜி (61), பாகிஸ்தானின் ராணுவ தலைவர் அஸ்பக் பர்வேஸ் கயானி (34), திபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமா (76) ஆகியோரும் 100 பேர் கொண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

முதல் 10 இடங்களுக்குள் ஜெர்மன் பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (4), மைக்ரோ சாப்ட் தலைவர் பில்கேட்ஸ் (5), சவுதி அரேபிய பட்டத்து அரசர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் (6), பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் (10) ஆகியோர் உள்ளனர்.


04
Nov
உத்தரகண்ட் லோக் ஆயுக்தாவுக்கு மாநில கவர்னர் உடனடி ஒப்புதல்!

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper




டேராடூன்: உத்தரகண்ட் சட்டசபையில் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட லோக்ஆயுக்தா மசோதாவுக்கு இரண்டே நாட்களில் கவர்னர் மார்கரெட் ஆல்வா ஒப்புதல் அளித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார். ஊழல் புகாரில் சிக்கும் முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், ஐஏஎஸ் உள்பட அரசு உயர்அதிகாரிகள் மற்றும் கீழ்மட்ட நீதிபதிகளிடம் விசாரணை நடத்தி தண்டிக்க வகை செய்யும் லோக்ஆயுக்தா மசோதாவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் கந்தூரி தலைமையிலான உத்தரகண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அன்னா ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன்லோக்பாலில் உள்ள சிறப்பம்சங்கள் அனைத்தும் இந்த லோக்ஆயுக்தா மசோதாவில் சேர்க்கப்பட்டன. கடந்த திங்கள்கிழமை சட்டசபையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இரண்டு நாள் காரசார விவாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை இரவு ஒருமித்த ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பொதுவாக கவர்னருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு நீண்ட ஆய்வுக்கு பிறகே ஒப்புதல் அளிக்கப்படும். ஆனால், உத்தரகண்ட் லோக்ஆயுக்தா மசோதாவுக்கு இரண்டே நாளில் கவர்னர் மார்கரெட் ஆல்வா ஒப்புதல் அளித்துள்ளார். முதல்வர் கந்தூரி முன்னிலையில் நேற்று ராஜ்பவனில் மார்கரெட் ஆல்வா இந்த மசோதாவில் கையெழுத்திட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். சட்டத்தை எழுத்துபூர்வமாகவும், உணர்வுபூர்மாகவும் தீவிரமாக அமல்படுத்துமாறு முதல்வரை கவர்னர் கேட்டுக் கொண்டார்.


Today's Important News (4-11-2011)

The Hindu
National:
Work halts at Kudankulam
Focus on structural reforms in G20: PM
Courts taking economic and corruption cases seriously
New national policy for senior citizens coming

International:
A crucial landmark for China
Greek crisis shadow over G20 summit
Russia clears barrier to join WTO

India & The World:
Take up modest projects, Peiris tells SAARC
India, China on course to achieve $100 b bilateral trade by 2015

Business News:
Fed slashes growth, employment projections

S&T, Environment, Defence:
No News

Sports:
Butt, Asif and Amir jailed in ‘spot-fixing' scandal

Others:
No News

Editorials & Articles:
When a Department let the University down
Bail versus jail
Women and war
‘There is a lot of deep technical expertise in India': Bill Gates
The global jobs crisis: the G-20 must act now to avoid a lost decade
Kenyan forces plan air strikes in Somalia

The Times of India

National:
Bigwigs oppose dalit procurement quota, but Sonia mantra does the trick
Ensure Markandey Katju sticks to his brief, NBA urges PM
Kanimozhi bail denial: Legal eagles divided over decision to deny bail
Bill to cleanse politics of criminals in winter session

International:
US, UK preparing to strike Iran?
‘ISI behind 26/11, Indian embassy attack in Kabul'

India & The World:
Distorted map: Chinese ambassador tells Indian journalist to shut up
A day after, Pak flip-flop on MFN status to India

Business News:
Trai rejects bid to hike revenue share
FDI in single-brand retail may be increased to 74%
'Referendum call brought many to a rational view'
Prolonged uncertainty in Euro to hurt others: PM

S&T, Environment, Defence:
China's first unmanned space docking a success

Sports:
No News

Others:
No News

Editorials & Articles:
The change we need
The right track
Time to act
'The Ramanujan issue reflects a bigger problem'

The Indian Express

National:
One of nine Muslims arrested for Malegaon had planted bombs for Hindu extremists, says NIA
RSS didn’t plot Gandhi killing, Hindu Mahasabha did, Patel told Nehru
NREGS wages: Jairam wants changes in Acts
Sardar scornful of UN ‘insecurity council’, thought AIR suppressed news at times
Panel rejects enemy property Bill
We will be handicapped without AFSPA: Army
Lead to feed is prize message

International:
No News

India & The World:
MFN: Pak keeps India guessing
India-Japan Air Force exercise next year
China envoy in row over India map

Business News:
Greece ditches bailout referendum
Euro instability could hurt India, says Singh
Transaction tax will raise cost of capital, warns PM

S&T, Environment, Defence:
No News

Sports:
No News

Others:
No News

Editorials & Articles:
The deterrence game
Most favoured steps
Gender Gini
Why our media is anti-people
Unraveling family planning

The Economist:
No News

No comments:

Post a Comment

We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation