திடப்பொருள்களில் அணுக்கள் பளிங்கு களினுள்ளே சமச்சீரான பாங்கில் அடுக்கப் பட்டிருக்கும். ஒரே மாதிரியான எண்ணற்ற அடுக்குகள் சரியான இடைவெளிகளில் முப் பரிமாண அமைப்பில் அடுக்கப்பட்டிருக்கும். 1982- ஆம் ஆண்டு இந்த நியதியைத்தான் தான் செஸ்மான் மாற்றி எழுதினார். வேகமாக திடப் படுகின்ற அலுமினியம் மற்றும் 10- 14 சதவீதம் மாங்கனீசு கொண்ட கலவையை எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்பின் மூலம் பார்க்கும் போது அணுக்கள் பளிங்கினுள்ளே இருபது முகி (Icosahedral) அமைப்பில் நீண்ட தொடராக காணப்பட்டது. இந்த புதிய வகை பளிங்கிற்கு புதிய வரையறையே வேண்டியிருந்தது. மேலும் பளிங்கினுள்ளே அடுக்கப்பட்டிருக்கும் அணுக் களின் பாங்கு ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டுக் காணப்பட்டது. மேலும் ஆய்வு மாதிரியை சுழற்றி நோக்கும்போது கூடுதலாக 5 மடிப்பு, 3 மடிப்பு இரண்டு மடிப்பு அச்சுகள் காணப்பட்டது. இதிலிருந்து குவாசி கிரிஸ்டல் இருபது முக சமச்சீரை கொண்டது என்ற முடிவுக்கு வரப் பட்டது. இக்கண்டுபிடிப்பு அறிவியலர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. செஸ்மான் ஆய்வு குழுவினின்றும் வெளியேற்றப்பட்டார். செஸ்மானின் போராட்டம் இறுதியில் வென்றது. அறிவியலர்கள் பளிங்குகளைப் பற்றிய தங்களுடைய கொள்கையை மறுபரிசீலனை செய்ய நிர்பந்தமானார்கள். குவாசி கிரிஸ்டல் களை (Quasierystals) கண்டுபிடித்தமைக்கு இவ்வாண்டின் வேதியலுக்கான நோபல் பரிசிற்கு செஸ்மான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தான் செட்சுமன் இஸ்ரேல் நாட்டில் டெல் அவீவ் நகரில் 1941-இல் பிறந்தார். தெக்னியான் எனப்படும் இஸ்ரேலிய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பொருளறிவியல் (Materials Science)துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். அதேபோல ஐயோவா பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக உள்ளார். அமெரிக்க அரசின் ஆற்றல்சார் துறையைச் சேர்ந்த ஏம்சு ஆய்வுக்கூடத்தில் (Aimes Laboratory)இணையாய்வராகவும் உள்ளார். 1982-இல் அமெரிக்காவில் உள்ள சீர்தரத்துக்கும் தொழில் நுட்பத்துக்குமான நாட்டக உயர்நுட்பத்தில் (National Institute of Standerds and Technology) பணியாற்றிய பொழுது, 1984-இல், இருபது முக முக்கோணக வடிவநிலையை (Icosahedral phase) என்பதை கண்டுபிடித்தார். இதுவே பின்னர் சிரொன்றா ஆனால் சீரானதுபோல் தோற்றம் அளிக்கும் அடுக்கு முறை கொண்ட படிகத்தை கண்டுபிடித்தார். இவர் கண்டுபிடித்த வியப்பூட்டும் வேதியியலுக்கான நோபல் பரிசுதான் செட்சுமனுக்கு இவ்வாண்டு அறிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment
We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation