இரு சூரியன்களைச் சுற்றிவரும் கோள்!
ஒன்றை ஒன்று சுற்றிக்கொண்டிருக்கும் இரண்டு சூரியன்களையும் அந்த இரண்டு சூரியன்களையும் சுற்றிவரக்கூடிய கோள் ஒன்றையும் நாஸாவின் கெப்லர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.
கெப்லர் 16பி என்று இந்த கோளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த கோள் இரண்டு நட்சத்திரங்களையும் சுற்றிவர 229 தினங்களை எடுத்துக்கொள்கிறதாம்.
இக்கோள் வாயுக்கள் நிரம்பிய ஒரு பெரிய கிரகமாகும். அதன் மேல் மட்டத்தில் -73 பாகை செல்ஷியஸ் முதல் -101 பாகை செல்ஷியஸ் வரையிலான கடும் குளிர் இருக்குமாம்.
இந்தக் கிரகத்துக்கு ஒளி வழங்கும் ஆதாரம் இரண்டுமே ஒன்றுக்கொன்று அருகில் இருப்பதால் இந்தக் கிரகம் எந்நேரமும் ஒளி வெள்ளத்தில் மிதக்கும்.
உயிர்கள் வாழ்வதற்குரிய அம்சங்கள் இந்தக் கோளத்தில் இல்லை.
ஆனாலும் இப்படி ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வானியல் ஆராய்ச்சியாளர்களிடையேயும் அறிவியல் புனைக்கதை ரசிகர்களிடையேயும் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது.
source :pathivu.com
No comments:
Post a Comment
We would love to hear you comments and suggestion.Our aim is to provide a better environment for studying TNPSC,UPSC and IAS exams for the future generation